ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியல் கிழக்கு மாகாணத்தில் “வீதி வாரம்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முப்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட கூட்டம் இன்று (13.07) ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் இணைப்பு அதிகாரி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM