ஏறாவூர் நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு தொடர்பான சபை அமர்வு இன்று (05) காலை  ஏறாவூர் நகர சபைக்கான புதிய  கூட்ட மண்டபத்தில்  கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது நடைபெற்று  முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு  போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மூலம் சபைக்கான தவிசாளர் தெரிவு  ஏறாவூர் நகர சபையில் உள்ளூராட்சி ஆணையாளர் முன்னிலையில் பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில்  ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிஈட்டிய வாஸித் அலி ஆசிரியர் அவர்கள் 7 க்கு 9  என்ற அடிப்படையில்  ஏறாவூர் நகர  பிதாவாக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More