கண்டி ஒக்ரேய்  கோட்டலில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கடந்த பெப்ரவரி (25)   நடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தெழுச்சி செயலமர்வில் தீர்மானிக்கப்பட்டதற்கு  இணங்க  இளைஞர் கலந்துரையாடல் நேற்று மாலை (05) ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  இளைஞர்  அமைப்பாளரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இனைப்பாளரும், உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் அகீல் அர்ஷாத்(JP)அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு  கிராமமட்டத்திலான (ஏறாவூர் நகர்,ஏறாவூர் பற்று/செங்கலடி,ஆருமுகத்தான் குடியிருப்பு) கட்சியின் இளைஞர்  அமைப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கட்சியின்  எதிர்கால நடவடிக்கைகள் சம்மந்தமான விரிவான  கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக  ஏறாவூர் பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர்  அமைப்பாளர் அவர்களின் தலைமையில் இன்று (06) மீராகேணியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More