Web
Analytics
ஏறாவூர் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு டென்ட் கையளிப்பு - Sri Lanka Muslim Congress

ஏறாவூர் சாலி ஹாஜியார் பௌன்டேசன் அமைப்பினால் ஏறாவூர் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு டென்ட் கையளிக்கும் நிகழ்வு நேற்று (14-05)பௌன்டேசனின் தலைவரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.நழீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஏறாவூர் பொதுச்சந்தையில் தமிழ்,முஸ்லிம் வியாபாரிகள் இனணந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிகழ்வின் போது 100 வியாபாரிகளுக்கு டென்ட்களை கையளித்தார். இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்களான ஜெமீல் மற்றும் ரியால் ஆகியோரும் பொதுச்சந்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM