Web
Analytics
ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நாட்டலும், நுழைவாயில் திறந்துவைப்பும்  - Sri Lanka Muslim Congress

பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் நிதியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும்,  பிரதியமைச்சர் அவர்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயிலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வும் பாடசாலையின் முதல்வர் M.M. முஹைதீன் தலைமையில் இடம்பெற்றது..

குறித்த நிகழ்வுகளில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் , பிரதேச செயலாளர் வீ. யூசுப், திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் சிவலிங்கம், பிரதியமைச்சர் அவர்களின் இணைப்பு செயலாளர்களான தபாலதிபர் நஸீர், முன்னாள் நகர முதல்வர் தஸ்லீம், முன்னாள் அதிபர்களான சயீத், மற்றும் சக்கூர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பாடசாலை நிருவாகிகள் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் அர்ஹம் எனும் மாணவனின் ஆக்கத்திறன்களின் கண்காட்சி நிகழ்வை பார்வையிட்டு மாணவனை பாராட்டிய பிரதியமைச்சர், 
கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது 1994 ஆம் ஆண்டு முதல் மாக்கான் மாக்கார் வித்தியாலய மைதான நிர்மானம் முதல் இன்று வரை செய்த பணிகள் தொடர்பிலும், தற்போதைய 3மாடிக்கட்டட நிர்மாணத்திற்கு அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து தெரிவித்ததுடன், மேலும் மைதான அரங்கை அபிவிருத்தி செய்யவும் , அடிப்படை வளங்களை அபிவிருத்தி செய்யவும் நிதிகளை ஒதுக்கீடு செய்வதாகவும் , மாக்கான் மாக்காரின் முன்னேற்ற விடயத்தில் தான் என்றும் பின் நிற்கப்போவதில்லை எனவும் இப்பகுதி மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தான் என்றும் கரம் கொடுத்து என் பணிகளை முன்னெடுப்பேன் எனவும்,  மேற்படி இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதில் தனது பங்களிப்பு தொடர்வதுடன் மத்திய அரசின் உறுப்பினர் என்ற வகையில் , கல்வி அமைச்சரின் ஒத்துழைப்புடன், ஏற்கனவே கல்வியமைச்சின் செயலாளரை இப்பாடசாலைக்கே நேரடியாக அழைத்து வந்து காண்பித்து நிலைமைகளை விளக்கிச் சொல்லியதன் அடிப்படையில் இதனை தேசியப்பாடசாலை ஆக்குவதற்கான முயற்சி தொடரும் என தெரிவித்தார்.

இதன்போது மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் அபிவிருத்தி விடயத்திலும் பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதோடு அதன் அடிப்படை தேவைகளை நிவர்த்திப்பதற்காக அன்று முதல் இன்று வரை பிரதியமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளுக்காக பாடசாலை சார்பில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நன்றி தெரிவித்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM