Web
Analytics
ஏறாவூர் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு - Sri Lanka Muslim Congress

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஒரு மில்லியன் ரூபாய் நிதியில் பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்களை ஏறாவூரில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சவுண்டர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டு 28 விளையாட்டு கழகங்களுக்கு கடினபந்து, மென்பந்து , உதைபந்து உபகரணங்களை பகிர்ந்தளித்தார்கள்,

இதன்போது பிரதேச செயலாளர் வீ. யூசுப், பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளரும் நகர சபை உறுபினருமான நழீம் ஹாஜி , நகர சபை உறுப்பினர் ரியாழ் ஹாஜி (லூலூ) , மாவட்ட கிரிக்கட் சபை தலைவர் பொறியியலாளர் ரஞ்சன் , பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான முன்னாள் நகர முதல்வர் தஸ்லீம், முன்னாள் அதிபர்களான சயீட் மற்றும் சக்கூர், செய்யிட் அஹமட் சாஹிர் மௌலானா , கிராம சேவை நிர்வாக அதிகாரி கபீர் முஹம்மட், விளையாட்டு உத்தியோகத்தர் ஜலீல், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அன்றைய தினம் கண்காட்சி கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM