Web
Analytics
ஏறாவூர் YSSC மேலும் பல வெற்றிகளை பெற்று மண்ணுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகிறேன்; பிரதியமைச்சர் மௌலானா. - Sri Lanka Muslim Congress

ஏறாவூர் இளந்தாரகை அணியினது இன்றைய நாள் வெற்றியை போன்று மேலும் பல வெற்றிகளை குவித்து இமாலய சாதனைகள் படைத்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதில் அந்த அணியின் ஸ்த்தாபக தலைவன் என்ற வகையில் புலகாங்கிதம் அடைகின்றேன்.
இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காத்தான்குடி உதைப்பந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண உதைப்பந்து அணிளுக்கு இடையில் நடைபெற்ற உதைப்பந்து சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏறாவூர் இளம்தாரகை அணியினருக்கான வாழ்த்துச் செய்தியிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதியமைச்சரின் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டு துறையை பொறுத்த மட்டில் , அதிலும் குறிப்பாக உதைப்பந்து துறையின் முடி சூடா மன்னனாக ஏறாவூர் இளம்தாரகை அணிதான் திகழுகின்றது என்றால் மிகையாகாது,  கிழக்கு மாகாணத்தின் எந்த ஒரு மூலையிலேனும் உதைப்பந்தாட்டத்தின் நாமம் உச்சரிக்கப்படுமானால் அதற்கான அடையாளமாக ஏறாவூர் இளந்தாரகை அணியே அனைவர் மனக்கணக்கண்களின் முன்னே வந்து செல்லும் அளவிற்கு  தங்களின் திறமையினாலும் , விடா முயற்சியினாலும் விளையாட்டு அபிமானிகளின் உள்ளங்களை இந்த அணி கொள்ளை கொண்டுள்ளதுடன்,  மிகத்திறமையான வீரர்களை கொண்டதாக சாதனை பல புரிந்து வருகின்றது என்பதை அண்மைக்காலமாக இவர்கள் பெற்று வருகின்ற தொடர் வெற்றிகளின் ஊடாகவும் ,  இதன் திறமையான வீரர்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச ரீதியான போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு திறமைகளை வெளிக்காட்டி வருவதன் ஊடாகவும் உணரக்கூடியதாக உள்ளது.


ஆகவே இவ்வாறான ஒரு திறமை மிகு அணி மென்மேலும் பல இமாலய வெற்றிகளை குவித்து பிறந்த மண்ணிற்கும், மாவட்டத்திற்கும் மென்மேலும் புகழையும் பெருமையையும் ஈட்டித்தர வேண்டும் என மனதார வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன் என சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ள ஏறாவூர் இளந்தாரகை அணியினருக்கு பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM