உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் ஷரத்தின் 2 ஆம் பிரிவு இணைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாாகண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

 

சட்டம் இயற்றும் சபையான பாராளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் இயற்ற முடியாது என்ற ஷரத்தை உள்வாங்குவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,

திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 

தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,

 

சோல்பரி யாப்பின் 29 ஆம் ஷரத்து பின்னர்  வந்த அரசியலமைப்புக்களில்  இருந்து நீக்கப்பட்டதன்ஊடாகவே பல்வேறு குழப்பங்களும் இனங்களிடையேயான விரிசல்களும் மோதல்களும் உருவாகினஎன்பதே உண்மை,

எனவே சிறுபான்மையினர் மத்தியில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அச்ச நிலைமையை மாற்றும்விதமாக மீண்டும் அரசியலமைப்பில் இந்த ஷரத்தை இணைக்க வேண்டும்.

 

 

 

அதே போன்று பௌத்தை மதத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமையளிப்பது தொடர்பில் எமக்குஎந்த வித பிரச்சினையுமில்லை ஆனால் ஏனைய மதங்கள் மற்றும் சமூகங்களுக்கும் உரிய இடம்அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்,

 

இதேவேளை மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் வலுவூட்டப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நிதி தொடர்பான முழுமையான கையாள்கை மாகாண சபைகளுக்கே வழங்கப்பட வேண்டும்,

யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்  இன்னும் பொது மக்களின் காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் படையினரிடமும் பாதுகாப்பு  காரணங்களுக்காகவும் தொடர்ந்தும்மக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளன,எனவே அவற்றை விரைவில் மக்களுக்கு வழங்க  ஆவணசெய்ய வேண்டும் என்பதுடன் காணி தொடர்பான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

 

அத்துடன் அண்மைக்காலமாக முஸ்லிங்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன் இலங்கையில் வளங்கள் சமமாக பகிரப்படாமையினால் கிழக்கில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பில்லாத பிரச்சினை மற்றும் வறுமை ஆகியவை தொடர்பிலும் இவை அரசியல் அதிகார ரீதியில் உள்ள பிரச்சினைகளாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஐநா பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM