ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், ஐந்­து நாள் உத்­தி­யோகபூர்வ விஜயமொன்றை மேற்­கொ­ண்­டு இன்று வியா­ழக்­கி­ழமை (09) சவூதி அரே­பியா பயண­மா­னார். அத்­துடன் புனித உம்ரா கட­மை­யையும் நிறை­வேற்­­ற­வுள்ளார்.

சவூதி அரே­பிய சுற்­றுச்­சூழல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் பெட்­லியை ஞாயிற்­றுக்­கி­ழமை சந்­தித்து நீர் வழங்கல் தொடர்பில் இரு­த­ரப்பு ஒப்­பந்­த­மொன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கைச்சாத்­தி­ட­வுள்­ளார்.

அத்­துடன் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள பாரிய நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை பார்­வை­யிடும் அமைச்­சர், அங்­குள்ள தொழில்­நுட்­ப­த்தை இலங்­கையில் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பிலும்க லந்­து­ரை­யா­ட­வுள்­ளார்.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு நிதி­யு­தவி வழங்கும் சவூதி அபி­வி­ரு­த்தி நிதி­யத்துடன் முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்­றிலும் கலந்­து­கொள்­கிறார். இதன்­போது, இலங்­கைக்கு நிதி­யு­த­வியை பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­ல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுக்­க­வுள்­ளார்.

இதே­வேளை 10, 11ஆம் திக­தி­க­ளில் ரியாத் நகரில் இலங்கை வாழ் மக்­களை சந்­திக்க­வுள்ளார். இச்சந்­திப்பில் முஸ்லிம் காங்­கிரஸ் போரா­ளிகள், கல்வி மற்றும் சமூக அமைப்­புகள், விளை­யாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள் சார்­பாக இலங்கை மக்கள் இச்­சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

இவ்­வி­ஜ­யத்­தில் பாராளு­மன்ற உறுப்­பினர்களா­ன எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், நகர திட்ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேல­திக செய­லாளர் உள்­ளிட்­ட அமைச்சின் உயரதி­காரிகளும் உடன் சென்­றுள்­ள­னர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM