Web
Analytics
ஒரு சமூகத்தின் எழுச்சியில் பிரதானமான பங்குவகிப்பது அச்சமூகம் பெற்றுக் கொள்ளும் கல்வியாகும்- மன்சூர் எம்பி - Sri Lanka Muslim Congress

ஒரு சமூகத்தின் எழுச்சியில் பிரதானமான பங்குவகிப்பது அச்சமூகம் பெற்றுக் கொள்ளும் கல்வியாகும். அக் கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பாடசாலை என்பதுவினைத்திறனுள்ளவைகளாக மிளிர வேண்டும். எனவேதான் ஒவ்வொரு பாடசாலையினது பழைய மாணவர்களாகிய நாம் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதுகாலத்தின் தேவையாகும். என சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

 

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொது கூட்டமும் நிர்வாக தெரிவும் நேற்றுமுன்தினம் பாடசாலை கேட்போர்கூடத்தில் அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில்  நடைபெற்றது. இதில் பிரமத அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – பாடசாலையின் மிகப் பெரிய தூணாக இருக்க வேண்டிய பழைய மாணவர் சங்கமாகும். பழைய மாணவர் சங்கம்என்பது ஒரு பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் அப்பாடசலையை விட்டு வெளியேறிய பின்னர் தான் கற்ற பாடசாலையும், பழைய மாணவர்களும் எதிர் கொள்ளும்பிரச்சினைகளை பௌதீகரீதியாகவும், சிந்தனாரீதியாகவும் வெற்றி கொள்வதற்காக பாடசாலை முகாமைத்துவத்துடன் இணைந்து செயற்படும் ஒரு அமைப்பாகும்.

பாடசாலையின் முன்னேற்றத்தில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் சிரத்தையுடன் ஈடுபட்டு அதன் வளர்ச்சியில் அதிபரும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழையமாணவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுகின்ற பொழுது பாடசாலை நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வது மாத்திரமன்றி சமூகமும் நல்ல பெறுபேறுகளை அறுவடைசெய்ய முடியும். 

எனவே, இப்பாடசாலையின் அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

இங்கு பாடசாலையின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.

இதனையடுத்து சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தலைவரும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் தலைமையில் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் தெரிவு இடம்பெற்றது.

புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் வருமாறு- தலைவர்: அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் (அதிபர்), உப தலைவர்: ஐ.எல்எம்.றிஸ்வான்(வைத்தியர்), செயலாளர்: நிஷார்தீன் (பிரதி அதிபர் – கல்முனை ஸாஹிறா கல்லூரி), உதவி செயலாளர்: எம்.பி.எம். பௌசான் (சட்டத்தரணி), பொருளாளர்: என்.மஹ்ரூப் ( ஓய்வுபெற்ற பிரதி அதிபர்), கணக்காய்வாளர்: ஐ.சலாம், செயற்குழு உறுப்பினர்கள்: அறூஸ் முகம்மட் (பொறியியலாளர்), எம்.ஐ.எம்.அனீஸ், ஏ.கே. ஆக்கீப், ஐ.எல்.எம். சப்ரி (பொறியியலாளர்), கே.எல்.எம். சக்கீ, எம்.ஐ. ஷபீக் இஸ்மாயில் மற்றும் போசகராக எம்.ஐ.எம். மன்சூர் (திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோர். தெரிவு செய்யப்பட்டனர்.

 

 

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்,சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர்த்தம்பி,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள், பெற்றார்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM