ஜனாதிபதி வேட்பாளராக இருந்த கொப்பேகடுவின் தளபதியைப் போன்று செயற்பட்டவர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க என்றால் மிகையில்லை

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கவின் அனுதாபப் பிரேரணையின் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். எனது பாடசாலை காலத்தில் 1982ல் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் போது அவரது அறிமுகம் கிடைத்தது.

அக்காலத்தில் நிலவிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உட்பூசல் விவகாரங்களில் இவரது பெயரும் பேசப்பட்டது. ஜனாதிபதி வேட்பாளராக கொப்பேகடுவ நின்ற சமயம் கட்சி எதிர்கொண்ட மோசமான நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தவர் அவர்.

அவரது தளபதியைப் போன்று செயற்பட்டவர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க என்றால் மிகையில்லை. கட்சியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் முனைப்புடன் பல தியாகங்களையும் மேற்கொண்டவர் அவர், இதனைக் கருத்திற்கொண்டே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கி கௌரவித்தனர் என்றும் தனது அனுதாப பிரேரணையின் போது கருத்துத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM