நீண்ட காலமாக ஒலுவில் பிரதேச மக்கள் ஒலுவில் துறைகத்தினால் காணிகளை இழந்து நஷ்ட ஈடுகளை பெறாமல் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் ஆகியோரை ஒலுவில் மக்களின் துறைமுக பிரச்சினை சம்மந்தமாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் துறைமுக அதிகார சபையின் காரியாலயத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பின் போது..
1.துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக பாதி காணியும் மிகுதி பாதி காணிக்கு பெறுமதியான பணமும் வழங்க துறைமுக அதிகார சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய முடிவு எடுக்கப்பட்டு இறுதி கட்ட வேளைகளுக்கான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டது.

2. ஒலுவில் துறைமுகத்திற்கு சொந்தமான காணி துண்டு ஒன்றினை ஒலுவில் அல்-ஜாயிஸா பாடசாலையின் மைதானத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது

3.நிரந்தமான மண் அரிப்பை தடுப்பதற்குரிய செயற்திட்டம் (ஆழ் கடலில் மண் அகலும் இயந்திரம் கொண்டு ) அடங்கிய கோவையும் கையளிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு முதலீட்டார்களை கொண்டு நவீன தொழிநுட்பங்களுடன் இவ் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன் இப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. 
அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கிடையிலானகூட்டம் நாளை காலை 10மணியளவில் துறைமுக அதிகார சபையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM