ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினால் அப்பிரதேச மக்கள் எதிர் நோக்கி வருகின்ற 
கடலரிப்பு பிரச்சனை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையொன்றை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் விஷேட பணிப்புரைக்கு அமைய மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் மகாவலி அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (12) இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் பைசால் காசிம், துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ஜயம்பதி, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி, துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் சந்திர காந்தி, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன பொது முகாமையாளர் சமரசிங்க மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர்
கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM