Web
Analytics
ஒலுவில் மீன் பிடி துறைமுகு படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை. - Sri Lanka Muslim Congress

ஒலுவில் மீன் பிடி துறைமுக நுழைவாயிலில் நிரம்பியுள்ள மண்ணை ‘ரெஜர் சயிறு கப்பலை’ பயன்படுத்தி அகற்றுவதில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில்கொண்டு மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகாணும் வகையில் குறித்த கப்பலின் பணி ஆரம்பிப்பதற்கு முன்னதான இடைத்தீர்வாக தனியாருக்குச் சொந்தமான ரெஜர் படகினை பயன்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் பெற்று மண்ணை அகற்றி படகுப் பாதையினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் மீன் பிடி துறைமுக நுழைவாயிலில் மண் நிரம்பியுள்ளதால் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நேற்று (22) சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஐ.எல். ஹமீட் ஆசிரியர் மற்றும் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மீன்பிடி இயந்திரப் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சாவை சந்தித்து மீனவர்களின் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக ரெஜ சயிறு கப்பலை பயன்படுத்தி மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட இருந்தது ஆனால் சீரற்ற காலநிலை காரனமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்படி கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தார்.

மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

– ஊடகப்பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM