Web
Analytics
கட்டானை நீர் வழங்கல் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பு  - Sri Lanka Muslim Congress

உத்தேச கட்டானை நீர் வழங்கல் திட்டம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (26) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

953 கோடி ரூபா நிதியில் இரண்டு கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட முடிவின் பின்னர் 30,000 நீர் இணைப்புகளை வழங்குவதன் மூலம் 143,000 மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேல் மாகாண சபை உறுப்பினர் லலித் வணிக ரத்ன, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், கே.ஏ.அன்சார், உப தலைவர் ஷபீக் ரஜாப்தீன், உயரதிகாரிகள் உட்பட பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM