கல்பிட்டி செயாப் மண்டபத்தில் நேற்று(04) நடைபெற்ற அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறப்பு கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வின்  பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வடமேல் மாகாண சபை உறுப்பினர்  M.H.M.நியாஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வருடம் அந்நூர் பாலர் பாடசாலைக்கு வழமை போன்று நிதி ஒதிக்கீடு செய்வதாகவும் அதே போல் கல்பிட்டி வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் எதிர் வரும் வருடம் இதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதே போல் கல்பிட்டியில் இரண்டு காபட் வீதிகள் அமைப்பதற்கான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கல்பிட்டுக்கு வந்துள்ளதாகவும் வெகு விரைவில் மழை காலநிலை சீரடைந்தவுடன் வீதிகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM