(யூ.கே.காலித்தின், எம்.வை. அமீர்)

தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு மைதானங்கள் இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள மைதானங்கள் இல்லாதது மிகுந்த குறையாகும். இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில் பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்து தரப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட “லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம் 2017” கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நேற்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

இந்தவருடம் கல்முனை கடற்கரை பள்ளியில் இருந்து சாய்ந்தமருது பூங்காவரையான, கடற்கரை பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்துக்குள் சாய்ந்தமருது பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தையும் புனரமைத்துத் தருவதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு அம்பாறை மாவட்ட கச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்­நி­கழ்வில் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான ஏ.சி. யஹியாகான், உளவளத்துறை வைத்திய ஆலோசகர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM