ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் சில்லறை கடை திறக்கும் அல்லது தையல் மெஷின் கொடுக்கும் அபிவிருத்தியல்ல நிலையான அபிவிருத்திsustainable development பல பரம்பரை பல தசாப்தங்கள் பயன்படுத்தக்கூடிய அபிவிருத்தி, இவ்வாறான அபிவிருத்திக்கு முறையான திட்டமிடல் அவசியம், சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் போது அரச பணம் வீண் விரயம் மட்டுமல்ல , சமூகமும் பாதிக்கப்படும் அதற்க்காகவே ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் அவதானமாக கையாள்கிறார் துறை சார் நிபுணர்கள் மற்றும் மக்களுடன் பறந்துபட்ட கலந்துரையாடலுடன் , இன்று திட்டமிடலுக்கான பொறுப்பை மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் வழங்கி உள்ளார் ,

அது மாத்திரமல்ல கல்முனை என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட பகுதியும் அல்ல இங்கு அரச காணியோ மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான அதிகளவான காணிகளோ இல்லை அபிவிருத்திக்கு தேவையான நிலத்தை விரைவில் பெற மாற்று சமூகத்தின் தடங்கல்களையும் வெற்றிகொண்டே அபிவிருத்தி செயட்பாட்டை மேற்கொள்ள வேண்டி உள்ளது, அத்துடன் அரசபணம் நாம் நினைக்கும் விதத்தில் பயன்படுத்த முடியாது ஒரு முட்டை அரச பணத்தில் வாங்குவது என்றாலும் அதற்கும் ஆயிரத்து எட்டு procedure ஐ தாண்டியே செல்ல வேண்டும் இல்லையென்றால் மாறி ஒரு அரசாங்கம் வரும்பபோது அதில் மோசடி வீண் விரயம் என்றெல்லாம் சொல்லி குறிப்பிட்ட அமைச்சருக்கு எதிராக விசாரணைகளை ஏட்பாடு செய்து கம்பி என்ன வைத்து விடுவார்கள்

ரவுப் ஹக்கீம் போன்றோர் ஏனைய ஊழல் அரசியல்வாதிகள் போன்று தாங்கள் செய்த ஊழலில் இருந்து பாதுகாப்பு பெற வருகின்ற ஆட்சிகளில் எல்லாம் ஒட்டிக்கொண்டு இருப்பவர் அல்ல, இவர் எந்த ஆட்சியிலும் நிரந்தரமாக இருக்கும் நோக்கம் கொண்டவரோ அரசாங்கம் அமையும் பக்கம் எல்லாம் சாய்பவரும் அல்ல, தனது மக்களுக்கு பிரச்சினை என்றால் அரசாங்கங்களை தூக்கி எரிபவர் அவ்வாறான சந்தர்ப்பத்தில் இருக்கின்ற அரசாங்கம் ஏதாவது இவரது குறைகளை தேடி சல்லடை போடும் பலி தீர்க்க, கடந்த மகிந்த அரசாங்கம் அரசை விட்டு வெளியேறியபோது பல சல்லடைகள் போட்டது இவரை தூக்கி போட ஆனால் எதையுமே அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை காரணம் தலைவர் அரச பண விடயங்களில் எப்பபோதுமே procedure பின்பற்றி மிகவும் கவனமாக நடப்பவர்.

அதன் காரணமாக அனைத்தும் நேர்த்தியாக நடைபெற வேண்டும் என்பதில் கூடிய கரிசலனை செலுத்துவதால் கல்முனை அபிவிருத்தி விடயத்தில் அதிக கலந்துரையாடலை மேற்கொள்ளுகிறார், சிறந்த திட்டமிடல் அமைந்துவிட்டால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கை மிகவும் வேகமாக நடைபெறும், எந்த அபிவிருத்தியிலும் திட்டமிடலுக்கே அதிக காலம் எடுப்பர், பொதுபணத்தில் பொது மக்களுக்கான அபிவிருத்தி என்பது நாம் வீடு கட்டுவது போன்றல்ல, இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த திட்டமிடல் பனி முடிவுற்று சமூகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் பாரிய கல்முனை அபிவிருத்தி துரிதகதியில் இடம் பெரும்.

Fareed Muhammed 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM