Web
Analytics
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 150 வருட பூர்த்தியின் நினைவாக 3 மாடி கட்டடம் - Sri Lanka Muslim Congress

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 150 வருட பூர்த்தியின் நினைவாக 3 மாடி கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலான ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானவின் பணிப்புரையில் குறித்த 3 மாடி கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

150 வருடங்கள் பழமைவாய்ந்த இப்பாடசாலையில் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரஃப் உள்ளிட்ட பல கல்விமான்கள் கற்ற இப்பாடசாலைக்கான குறித்த கட்டட நிர்மாணப் பணி மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM