கல்முனைப் பிரதேசத்தில் மிகவும் முக்கியம்வாய்ந்த கழகமாக வளர்ந்துவரும் டோப்ரேங் விளையாட்டுக்கழகத்தினர் அவர்களின் தேவைப்பாடுகளை முன்வைத்து கல்முனை  மாநகரசபை உறுப்பினரும் அமைச்சர் அல்ஹாஜ்-ரவூப்ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை நேரடியாக அவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்.

இதன்போது எமது கழகத்தினர் உங்களது அனைத்துவித செயற்பாடுகளிலும் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். மேலும் உங்களுடைய கழகத்தினர் விளையாட்டில் மாத்திரம் முழு நேரத்தையும் செலவளிக்காமல் சமூக சேவை மற்றும் கல்முனைமாநகரசபைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக எங்களோடு இணைந்து செயற்படுமாறும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் வேண்டிக்கொண்டார்.

மேலும் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்க காசோலையினை கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் வழங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM