கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் திங்கட்கிழமை (21) பிற்பகல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் மஹாநாம, சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த நிபுணர்கள், அமைச்சின் செயலாளர் சரத்சந்திரசிறிவிதான, மேலதிகச் செயலாளர் நபீல் மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபற்றினர்.

சிங்கப்பூர் நகர கட்டமைப்பை வடிவமைத்த கட்டடக்கலை நிறுவனமானது மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் மஹாநாம குழுவினருடன் இணைந்து கல்முனை – சம்மாந்துறை ஒருங்கினைந்த நகர திட்டமிடல் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

– ஊடகப் பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM