கல்முனை ஸாஹிரா கல்லூரி கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர் தின நிகழ்வு அதிபர் எம்.எஸ். முஹமட் தலைமையில் இன்று (2) புதன்கிழமை கல்லூரி எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றகுமான், சாய்ந்தமருது மசூரா கவுன்சில் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல், ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் டாக்டர் என். ஆரிப், போக்குவரத்து திணைக்கள பிரதம பரிசோதகர் ஏ.எல்.எம். பாறுக், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. அப்துல் பசீர், கல்முனை ஆசாத் பிளாசா முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.எம். ஆசாத், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.பி. ஜௌபர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு அகில இலங்கை, மாகாண, மாவட்ட மட்டங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களும் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட மாணவர்களும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அர்பணிப்புடன் கற்பிக்கும் ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு பாடசாலையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதி உதவிகளை வழங்குகின்ற அனுசரணையாளர்களை கௌரவித்து அவர்களின் நிதி உதவிகள் தொடர்பான தகவல்களை பேணிப்பதுகாப்பதோடு அவற்றை கல்லூரியின் இணையத் தளத்தில் பதிவிடுவதற்கான முயற்சிகளை கல்லூரி செய்துவரும் அதேவேளை நிதி உதவிகளை வழங்குகின்றவர்களின் நிதியின் அளவிற்கேற்ப ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி அவர்களுக்கு சாண்றிதழ்கள் வழங்குவதோடு தங்கம், வெள்ளி, வென்கல சலுகை அட்டைகளை வழங்குகின்ற திட்டம் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மேலும் க.பொ.த. உயர்தர மாணவர் தின நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாக இப்பாடசாலைக்கான கண்காணிப்பு கேமரா தொகுதியின் இயக்கம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசினாலும் பாடசாலை ஊழியர்களின் வரவேட்டினை பதிவதற்கான கைரேகை இயந்திரத்தை பிரதி அமைச்சர் முன்னிலையில் கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹமதினாலும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

– ஊடகப் பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM