Web
Analytics
களுகங்கை திட்டத்தின் முதலாம் கட்டம் இரண்டாவது படிநிலை திட்டத்தை பிரதமர் ரணில் திறந்து வைத்தார் - Sri Lanka Muslim Congress

களுகங்கை நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டம் இரண்டாவது படிநிலை திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு இன்று (5) மாலை ஹொரணை கந்தன நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது. ஆயிரத்து 13,500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் நன்மை அடையவுள்ளார்கள்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM