Web
Analytics
கழிவு நீரை மீள்சுழட்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கான கருத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்; அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress

கழிவு நீரை மீள்சுழட்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கான கருத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.இம்முறை எமது கருப்பொருள் கழிவுநீர் முகாமைத்துவம் என்பதாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர் நோக்கும் பாரிய சவால்களில் முக்கியமான ஒன்றாக இதனைக் கொள்ளமுடியும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ,நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 
உலக நீர் தினத்திதை முன்னிட்டு கொழும்பு தாமரைத்தடாகத்தில்  இன்று (22) செவ்வாய்க்கிழமை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
 
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில் 
 
கழிவு நீரை மீள் சுத்திகரித்து அதனைப் பயன்படுத்துவது தொடர்பாக எமது மக்கள் அறிவூட்டப்பட வேண்டும். எமது நீர் மூல வளங்களையும், நீரேந்தும் காடுகளையும், பாதுகாக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஆறு, குளம் முதலான நீர்வளங்களை பாதுகாக்கும் விடயத்தில் ஜனாதிபதி கூடிய அக்கறை செலுத்தி வருகிறார்,
 
பொது சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்திய நீரையும் (Black Water), ஏனைய விதமான சுத்தப்படுத்தல்களுக்காக  பயன்படுத்தப்பட்ட நீரையும் ( Gray water) மீளப் பயன்படுத்துவதற்காக சுத்திகரிக்கும் முறைகளும் காணப்படுகின்றன. இந்தப் பொறுப்பை நிறைவேற்ற புதிய பொறிமுறைகளை அறிமுகப்படுத்தி நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு வேறு தனியான ஒரு அலுவலகத்தை எமது அமைச்சின் கீழ் ஆரம்பித்துள்ளோம். 
 
“காபன் கொபி” எனும் மற்றுமொரு கொள்கைத்திட்டமும் உள்ளது. அதாவது உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளிலும் காணப்படும் நீரின் பெறுமானத்தை கணிப்பீடு செய்யும் செயல்முறையாகும். இதற்காக பல்வேறு சட்டதிட்டங்கள் வகுத்து செயலாற்ற வேண்டியிருந்தாலும் இதனை தற்போது சுயமாக விரும்பி செயற்படுத்தும் நடை முறையொன்றை உத்தேசித்துள்ளோம். பூமியில் பெருமளவிலான நீர் மூல வளங்கள் காணப்பட்டாலும் தற்போது நிலவும் வறட்சியான காலநிலைக்கு முகம்கொடுப்பது ஒரு சவாலாகவே காணப்படுகிறது. எமது நாட்டில் சில பகுதிகளில் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடும் எமக்கிருக்கிறது.
 
எமது அமைச்சின் மூலம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பாரிய கருத்திட்டங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் இதற்காக 300 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் எமது நாட்டில் குழாய்வழியாக சுத்தமான  குடிநீரை பெற்றுக்கொள்வோரின் தொகை 60 சதவீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குடிநீரை  பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறைகளில் ஒன்றான கடல்நீரை சுத்திகரிக்கும் செயற்திட்டத்தை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்தவுள்ளோம். யாழ்ப்பாணம், கற்பிட்டி முதலான பிரதேசங்களில் மட்டுமல்லாது அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய வர்த்தக வலயத்திற்கும் இப்பொறிமுறை மூலமே நீரைப்பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். 
 
பேராதெனிய பல்கலைக்கழத்துடன் இணைந்து சீன அரசின் அனுசரணையுடன் நீர் தொடர்பான ஆய்வு மையம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளோம். எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன நாட்டு தலைவரால் இக்கருத்திட்டத்தை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம் எனவும் அவர் கூறினார்.
 
இந்நிகழ்வில், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தேசிய ரீதியாக  பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அமைச்சின் அதிகாரிகள்,  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 

Displaying 1H6A3257.JPG

Displaying 1H6A3348.JPG

Displaying 1H6A3523.JPG

Displaying 1H6A3525.JPG

Displaying 1H6A3579.JPG

Displaying 1H6A3584.JPG

Displaying 1H6A3713.JPG

Displaying 1H6A3748.JPG

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM