சென்னையில் சனிக்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். அவரது ஜனாஸா தொழுகை திருவான்மியூர் நூர் மஸ்ஜீதில் நடைபெற்ற பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அமைச்சர் ஹக்கீம் இரங்கலுரையும் ஆற்றினார்.

முன்னதாக, அமைச்சர் ஹக்கீம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரிலுள்ள கவிக்கோவின் இல்லத்திற்கு சென்று கவிக்கோவின் ஜனாஸாவை பார்வையிட்டு, அவரது மகளுக்கும், மருமகனுக்கும் அனுதாபம் தெரிவித்ததோடு, ஆறதலும் கூறினார்.

காலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவராக அண்மையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீனை அமைச்சர் ஹக்கீம் மண்ணடியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து நேரில் பாராட்டினார். அங்கு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. பேராசிரியர் காதர் முகைதீன் இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அமைச்சரிடம் தமது கவலையை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM