கவிக்கோ நினைவேந்தல் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகள் சனிக்கிழமை (18) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றன.

அதில் சிறப்புச் சொற்பொழிவாளராக கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் இந்திய லோக் சபா முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் உரையாற்றுகையில் இந்நியாவைச் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு இலங்கையில் இவ்வாறானதொரு கௌரவம் வழங்கப்படுவதையிட்டு அதனை ஏற்பாடு செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் தமிழ்நாடு சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும், மறைந்த கவிக்கோ இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இலக்கியத்தில் இணைப்புப் பாலமாக விளங்கினார் என்றும் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்மாநில முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், கம்பவாரிதி இ.ஜெயராஜ், போராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், கலாநிதி ஏ.எல்.ஏ.ரவூப், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் ஆகியோரும் உரையாற்றினர்.

வழக்கொழிந்து போயுள்ள அரபுத் தமிழை மீண்டும் ஊக்குவிக்கும் விதத்தில் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை எனப்படும் நம்பிக்கை நிதியம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எஸ்.தௌபீக், எம்.எச்.எம்.சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நஜீம், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், மேமன்கவி ஆகியோர் உட்பட நாடெங்கிலுமிருந்து வருகை தந்த அநேகர் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM