கர திட்டமில் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் இருபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட காத்தான்குடி நகரசபை பொது மலசலகூடமானது இன்று பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன்,காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன்,காத்தான்குடி நகரசபையின் கணக்காளர் மனாசிர்,காத்தான்குடி நகரசபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ்,தொழிநுட்ப உத்தியோகத்தர் றமீஸ் உற்பட ஊர்ப்பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பொது மலசலகூடமானது ஆண்களுக்கு வேறாக குளியலறை உற்பட மூன்று மலசல கூடமும் பெண்களுக்கு வேறாக குளியலறை உற்பட மூன்று மலசல கூடமுமாக பிரத்தியேகமாக மிகவும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM