கிண்ணியாவில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 180 இலட்சம் ரூபா செலவில் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார பிரதி அமைச்சரான பைசல் காசீம் தெரிவித்தார்.

அதே நேரம் நாடளாவிய ரீதியாக டெங்கு நோயினால் இதுவரை 22 ஆயிரத்து 562 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என்றும் 39 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதுவிவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,

டெங்கு நோயினால் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 1610 பேர் பாத்திக்கப்படுள்ளதோடு, 14 பேர் பலியாகியுள்ளனர் என்று தற்போது உறுதியாகத் தெரியவந்துள்ளது. யாழில் 1387 பேரும் இதனால் பாதிக்கபட்டுள்ளனர்.

கிண்ணியா, மூதூர் மற்றும் உப்பு வெளியிலேயே இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு, 2016 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து நிலவிவந்த சிறு மழை வீழ்ச்சிகள் மற்றும் கால நிலை மாற்றங்கள் என்பனவே பிரதானக் காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து உரிய விதத்தில் கழிவகற்றல் இடம்பெறாமை, டெங்கு நோய் பரவும் பகுதிகளை கண்டறிந்து அழிக்காமை மற்றும் பாடசாலைகளில் பரவும் டெங்கினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதமையால் தான் தற்போது நாடளாவிய ரீதியாக 22, 562 பேர் பாதிக்கப்பட்டும் 39 பேர் பலியாகியுமுள்ளனர்.

அத்தோடு, கிண்ணியா பிரதேசத்தில் டெங்கின் தீவிரம் அதிகமாக காணப்படுகின்றமையால் 180 இலட்சம் ரூபா பெறுமதியில் அவசர சிகிச்சைப்பிரிவொன்றை ஸ்தாபிக்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்ப்பட்டது. அது மட்டுமன்றி, அங்கு நிலவும் வைத்தியர், தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் நோயாளர்களை துரிதமாக அடையாளம் காணும் வகையில் ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக் கொள்ளப்படவுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM