ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முயற்சியின் பயனாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக்கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் தற்பொதுழுது அரசதுறை தொழிற்பயிற்சி நிலையங்கள் 13 செயல்படுகின்றன. பல்வேறு துறைகளுடன் தொடர்புபட்ட 54 கற்கைநெறிகள் இவற்றில் நடத்தப்படுவதுடன் , தனியார் துறையில் 24 பயிற்சி நிலையங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

அரச துறை பயிற்சி நிலையங்களில் கடந்த வருடத்தில் 2200 பேர் பயிற்சிபெற்றனர். இந்த பயிற்சி மத்திய நிலையங்களில் தற்பொழுது 3 அல்லது 4 மட்டத்திலான கற்கைநெறிகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

தேசிய தொழில் தகுதிக்கான 5 அல்லது 6 தரத்திலான கற்கை நெறியைத் தொடர்வதற்கு அனுராதபுரம் அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிற்கு செல்ல வேண்டிய இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்களின் நன்மைக்கருதி 434 மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கல்லூரி ஒன்றினை அமைப்பதற்காக திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM