Web
Analytics
கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட நீர்ப் பாவனைப் பிரச்சினைக்கு தீர்வு - Sri Lanka Muslim Congress
(அகமட் எஸ்.முகைடீன்) 
 
கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீர்ப் பாவனைக்கான கட்டண நிலுவையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையினை ஆராய்ந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (25) வியாழக்கிழமை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட புதிய முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகளை கிறீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் சந்தித்து கலந்துரையாடினார். 
 
இக்கலந்துரையாடலின்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். றோசன் அக்தர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஃமத் மன்சூர், எம்.எஸ்.எம். சத்தார், எம்.எஸ்.எம். நிசார், ஏ.எம். பைறூஸ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
 
நீர் வழங்கல் திணைக்களத்தினால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான நீர் பாவனைப் பட்டியல் மொத்தமாக வழங்கப்படுவதாகவும் முகாமைத்துவ குழுவினாரால் வீடுகளுக்கான தனித் தனி நீர் பாவனைப் பட்டியல் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவ்வகையில் குறித்த வீட்டுத்திட்டத்திலுள்ள நீர்பாவனையாளர்கள் தமது நீர் கட்டணங்களை சமுர்த்தி வங்கியில் முன்னைய முகாமைத்துவ குழுவினருக்கு செலுத்தியுள்ள நிலையில் குறித்த முகாமைத்துவ குழுவினர் நீர்க் கட்டணத்தில் நிலுவையினை வைத்துள்ளதாக இதன்போது முறையிட்டனர். 
 
அதற்கமைவாக முன்னைய முகாமைத்துவ குழுவினரின் கணக்கறிக்கையினை கல்முனை பிரதேச செயலாளர் பரீசீலித்து குறித்த கணக்கறிக்கை தொடர்பில் அறிக்கையிட கோருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கு இடமளிக்காமல் நீர் வழங்கல் திணைக்களத்தினால் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தனி நீர் இணைப்பினை வழங்கி நீர் வழங்கல் திணைக்களத்தினாலேயே பட்டியல்களை வழங்குவதற்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM