கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திட்டங்களை  முன்னெடுப்பதற்கான   சந்திப்பொன்று கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  தலைமையில்  இன்று முற்பகல்  சுற்றுலா அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின்   செயலாளர் சுகத்தாஸ உதவிசெயலாளர்  திருமதி வீரகோன், அமைச்சின் உயர் அதிகாரிகள்,கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின்    தலைவர்  சந்திரா  மொஹட்டி மற்றும் பணியகத்தின்  பணிப்பாளர்  ஜௌபர்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்திற்கு  சுற்றுலாப் பயணிகளை  கவரும் விதமான திட்டங்களை  முன்னெடுத்தல்,சுற்றுலாத் தளங்களை  அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள்  தொடர்பில்  இந்த சந்திப்பின்  போது  கலந்துரையாடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More