Web
Analytics
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானம் - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களின்  முயற்சியின் பலனாக ஏற்கனவே கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியும் நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதனால் இன்று (19) கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

அந்த இடத்திற்கு உடனே விஜயம் செய்து அவர்களோடு கலந்துரையாடிய பின்பு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இராஜாங்க கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன, மேலதிக செயலாளர் ஹேமந்த, முஸ்லிம் பிரிவுக்கான பணிப்பாளர் தாஜுதீன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பு வருகின்ற ஒக்டோபர் மாதம் 2ம், 3ம் மற்றும் 4ம் திகதிகளில் தொண்டர் ஆசிரியர்களின் ஆவனங்களை பரீசிலித்துவிட்டு நியமனம் வழங்க நடவடிக்கைக எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI வாகித் அவர்களும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM