கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட்  கெளரவ. கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட் அவர்களினால் 2017.02.16ஆந்திகதி – வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருக்கான நியமன கடிதத்தினை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து கெளரவ. கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட் அவர்கள் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களிடம் வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அசீஸ், வீடமைப்பு அதிகாரசபையின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. பாயிஸ் மற்றும் உயர்பீட உறுப்பினர் எம்.எச். கபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM