குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணி பிரச்சினைகள் கடந்த சுனாமிக்கு பின்னர் 2006 ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது அன்றுமுதல் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இருந்த காணி பிரச்சினை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமானார் ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் தலைமையில் அவரது காரியாலயத்தில் (11) திங்கள் மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ,குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன்,முன்னால் குச்சவெளி பிரதேச உறுப்பினர் ஆசிக் மொஹமட்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர் சிபினிஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு குறித்த காணி விடயமாக ஆராயப்பட்டு நிரந்தர தீர்வு பெறப்பட்டது

பாடசாலைக்கான தகுந்த காணியினை ஏலவே வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள காணி ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள ஆசிரியர் விடுதிக்குமான காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்பான்மை இனத்தை சேந்த ஒருவருக்கு சுமார் 80 பேர்ச் காணி இருப்பதாக பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது குறித்த நபருக்கான 80 பேர்ச் காணியினை பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பகுதியில் மாற்று காணியாக வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதுடன்

மாகாண காணி ஆணையாளர் குறித்த பகுதிக்கான வலைய கல்வி பணிப்பாளரால் தனக்கு கடிதம் மூலம் அனுப்புமிடத்து அவற்றை பாடசாலைக்கு விடுவிக்கலாம் மேலும் குச்சவெளி பிரதேச செயலாளர் காணி பயன்பாட்டு குழுவிற்கு சமர்ப்பித்து அவற்றை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தர முடிவாக தீர்மானிக்கப்பட்டது அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி முதல் அமைச்சரால் பணிப்புரை வழங்கப்பட்டது

குறித்த காணி விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களும் பல முயற்சிகள் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM