பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையில் போட்டியிட்ட எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இன்று (09) கன்னி அமர்வில் சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

தேர்தல் முடிவுகளின் படி கட்சிக்கள் பெற்றுக் கொண்ட ஆசனங்கள பின்வருமாறு ஒதுக்கப்பட்டது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04, தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 03, மக்கள் காங்கிரஸ் – 03,
ஐக்கிய தேசியக் கட்சி-02, சுதந்திர கட்சி – 2, சுயற்சைகள் ஒவ்வொன்று வீதம் 2 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இவ்வாறு ஆசனங்களை பெற்றுக் கொண்ட கட்சிகளுக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுதந்திர கட்சி ஒரு உறுப்பினரும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரும் மற்றுமொரு உறுப்பினரும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தவிசாளரை ஆதரித்து வாக்களித்தமையால் முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபை ஆட்சியை தம் வசப்படுத்திக் கொண்டது.

மேலும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ உறுப்பினர் ஏ.முபாறக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சாணக்கியத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தவூபிக் அவர்களின் முயற்சியாலும் குச்சவெளி பிரதேச சபை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் சபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM