Web
Analytics
குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க அரச அரசாங்க அதிபர் இணக்கம் - Sri Lanka Muslim Congress

யுத்தகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பொதுமக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், அவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (11) காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் பாராளுமன்றத்தில் உயர்மட்டக் கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது, புல்மோட்டை உள்ளிட்ட முஸ்லிம் காணிகளை பகுதியளவில் விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மேலதிக காணிகளையும், விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வனபரிபாலன திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், ஏலவே காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம் காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்கும் இடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM