குறுத்தலாவ பிரதேசத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை நகர திட்டமிடல்  மற்றும் நீர்வழங்கல் வடிகால்த்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று சந்தித்தார் .

கட்சியின் மூத்த போராளிகள் பலரும்  கலந்து கொண்ட இந்த நிகழ்வில் எதிர்காலத்தில் கட்சியின்  நடவடிக்கைகள்  தொடர்பாகவும்,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு , பாடசாலை மற்றும் பாதை அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.
 
 இதனபின்னர்  குறுத்தலாவ கந்துறுதெக  பிரதேசத்தில் வசிக்கின்ற 350 குடும்பங்களின் நீண்ட கால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அப்பிரதேசத்தில் பூர்த்திசெய்யப்பட்ட குடிநீர் திட்டமானது மக்கள் பாவனைக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது  .இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பதுளை மாவட்ட அமைச்சரின் இணைப்பாளருமான பி , தாஜுதீன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நாசர்  பதுளை மாவட்ட    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் டாக்டர்  மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM