பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் 23ஆம் திகதி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
எதிர்கட்சித் தலைவரின் உரையைத் தொடர்ந்து நான் இங்கு உரையாற்றுகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்துள்ள இந்த ஒத்திவைப்பு வேளைப்பிரரேரணை மிகவும் நடுநிலையானது நாட்டின் எல்லாச் சமூகத்தினரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு ஒத்துழைத்தனர் என்பது இரகசியமல்ல.

யுத்தத்திற்கு பிந்திய சூழ்நிலையில் மீண்டும் நாட்டில் அமைதி சீர்குலைந்திருந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிடுபொடியாக்குவதற்கு சிறு தொகையினரான இனவாதிகள் எத்தனிக்கின்றனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் இவ்வாறான தீவிரவாத செயல்பாடுகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. கடந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து இதுவரை 20 க்கும் மேலான இனவாதச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை வெறுப்பூட்டும் குற்றச்செயல்கள் என்ற வகையில் அடங்கும். இவற்றில் அநேகமானவை சட்டத்தின் பாதுகாவலர்களான பொலிஸார்கள் பார்வையாளர்களாக இருக்கத்தக்கதாக இடம்பெற்றுள்ளது.
அவர்கள் வீடுகளையும் குடிசைகளையும் தகர்த்திருக்கின்றார்கள். இவ்வாறான குற்றச்செயல்களை இந்நாட்டின் பிரதான செய்தி ஊடகங்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. குறிப்பாக இவ்வாறான தீய காரியங்கள் தொடர்பான செய்திகளை பிரதான ஊடகங்கள் nளியிடாமல் தவிர்ந்து கொண்டன. முக்கியமாக சிங்கள ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொண்டன. ஆங்கில ஊடகங்களில் கூட இந்த இனவாத செயல்களுக்கு போதிய இடமளிக்கப்படவில்லை. இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். (பல பத்திரிகைகளின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன)
கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான போதும், பாணந்துறைப் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோதும் மேற்சொன்ன மொழிகளிலான ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்தன.
எதிர்க்கட்சித் தலைவரின் சொந்த மாவட்டத்திலேயே தோப்பூரில் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் இடங்களில் தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து இனவாதிகள் அட்டகாசம் புரிந்துள்ளானர். மக்களை துரத்தியடித்துள்ளனர். அவ்வாறே ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் ஓனாகம பிரதேசத்தில் சின்னவில்லுப்பட்டியில் நானும்கூட 25 ஆண்டுகள் இளவயதில் வசித்த பகுதியில் சர்ச்சைக்குரிய தேரர் குழுவினருடன் வந்து அடாவடித்தனம் புரிந்தபோது பொலிஸார் வெறும் பார்வையாளர்களாக இருந்துள்ளனர். நான் இதனை சட்டமும் ஒழுங்குக்கும் பொறுப்பான அமைச்சரினதும் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அமைச்சரவையிலும் பேசினோம். மூன்று நாட்களுக்கு நிலைமை சீராக்கப்படும் என்றார்கள்.
இவ்வாறான காரியங்களினால் தான் கடந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரான நாங்கள் அரச உயர்மட்டத்தினரை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பிரச்சினைகளுக்கு அவசரமாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். நானும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட ஜனாதிபதியைச் சந்தித்து இந்த அத்துமீறிச் செயல்படும் இனவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றோம்.
இவ்வாறான இனவாதச் செயல்கள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் மேற்கொள்ளப்படும் காரியங்கள் அல்ல. அரசாங்கத்தை சீர்குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சியும்கூட என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன்.
ஆகவே, இந்த செயல்பாடுகளில் பாரதூர தன்மைபற்றி உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிப்பதற்கு சட்டத்தில் தாராளமாக இடமிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM