மறைந்த அஷ்ஷெய்க் ஹைருல் பஷர் (நளீமி) ஆரவாரமின்றி அமைதியாக இஸ்லாமிய சன்மார்க்கப்பணியில் அயராது ஈடுபட்டவர்

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஹைருல் பஷர் (நளீமி) காலமான போது நான் சவூதி அரேபியாவில் இருந்தேன். அவர் மறைந்த செய்தி எனக்கு கூறப்பட்டதும் நான் மிகவும் கவலையடைந்தேன்.

இலங்கையிலும் சூடானிலும் கற்றுத்தேறிய மர்ஹூம் அஷ்ஷெய்க் ஹைருல் பஷர் (நளீமி) சிறந்த சன்மார்க்க அறிஞராக திகழ்ந்ததோடு, வெள்ளிக்கிழமைகளில் தரமான கொத்துபா பிரசங்கங்களை நிகழ்த்துவதிலும் சிறந்து விளங்கினார். கல்விமான்கள் பலரின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த அவர் பல நூல்களையும், ஏராளாமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

எனது அழைப்பை ஏற்று சிலநிகழ்வுகளில் அவர் பங்குபற்றியுள்ளதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் உரிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இறுதி மூச்சுவரை தாம் கற்றுத்தேறி கல்விப்பணியாற்றிய நளீமிய்யா கலாபீடத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவராக அவர் விளக்கினார். அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவன வாழ்வு கிட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM