Web
Analytics
கொழும்பு கன்ஷா கல்லூரியின் கண்காட்சியும், புத்தக சந்தையும் பிரதம அதிதியாக அலி சாஹிர் மௌலானா - Sri Lanka Muslim Congress

கொழும்பு 10 சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கன்ஷா கல்லூரியின் கல்விக்கண்காட்சியும் புத்தக சந்தையும் இன்று காலை பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் அன்வர்தீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன், தெரிவு மாணவர் தலைவர்களுக்கு சின்னங்களையும் சூட்டி வைத்தார்கள்

குறித்த நிகழ்வில், கொழும்பு டெல்மன் வைத்தியசாலையின் பணிப்பாளர் முஸ்தாக்டீன், Asia Trade Centre நிறுவனத்தின் பணிப்பாளர் சரூக், South Asia Gateway Terminal நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்வி, கன்ஷா கல்லூரி பணிப்பாளர் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லாபீர், IDM Computers நிறுவனத்தின் தவிசாளர் ரனசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM