கடந்த 38 வருடகாலமாக புனரமைக்கப்படாதிருந்த சம்மாந்துறை ஆண்டிட சந்தி – சமிட் புரத்திற்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படுவதுடன்,சமிட்புரத்தினையும், செந்நெல் கிராமத்தினையும் இணைப்பதற்கென விவசாயப் பாலமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாகயிருந்த இத்திட்டத்தினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கென நீர்ப்பானச மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் நீர்ப்பாசனத்திணைக்களம் 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தினை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ. அன்வர், நீர்ப்பானத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று (21) சமிட்புரத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டார். 


இப்பாதை புனரமைப்புச் செய்து பாலம் அமைப்பதன் மூலமாக பொதுமக்களும், விவசாயிகளும் சம்புமடு, செந்நெல் கிராம்ம், உடங்கா, மலையடிக்கிராம், தென்னம்பிள்ளைக் கிராம்ம் 20 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்களுக்கு மிக இலகுவாக போக்குவரத்தினை மேற்கொள்வதோடு, இதன்மூலம் இக்கிராமங்களில் வாழ்ந்துவரும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.
இவ்வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் கனரக இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM