கல்முனை, சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகரை முன்னணி பெருநகரப் பிரதேசமாக மாற்றியமைக்க பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களைமுன்னெடுக்கவுள்ளோம். என நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 30மில்லியன் ரூபாய் நிதியில் சம்மாந்துறை வண்டுவாய்க்கால் வீதிக்கான காபட் இடும் ஆரம்ப வைபவம் கடந்த சனிக்கிழமை (12) சம்மாந்துறை கைகாட்டிச்சந்தியில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேஇவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே –
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத்தேர்தலின் போது கல்முனை புதிய நகரத்திட்டம் ஒன்றைஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஒரு செயற்திட்டம் ஒன்றை முன்வைக்கும் என வாக்குறுதியளித்திருந்தார்அதற்கமைய கடந்த வரவு செலவுத்திட்டத்திலே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற போது நான் கல்முனை மாநகரஅபிவிருத்தித் திட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை நகரத்திட்டம் என மாற்றியமைத்து இப்போதுசம்மாந்துறையைச் சேர்த்து கல்முனையோடு அபிவிருத்திச் செய்கின்ற ஒரு பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கானதிட்டமிடலை செய்து கொண்டிருக்கின்றோம்.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கட்டிடநிர்மாணத்துறை பேராசிரியர் பீ.கே.எஸ். மஹாநாம மற்றும் கலாநிதி ரீ.எம்.என். விஜயரத்தின ஆகியோர் தலைமையிலான பல நிபுணர்கள் அடங்கிய குழுவினரை ஒவ்வெருமாதமும் சந்தித்து இதுசம்பந்தமான திட்டமிடல் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த அறிக்கைஇம்மாத இறுதிக்குள் புரணப்படுத்தப்பட்டு எங்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அதனைத்தொடர்ந்து பிரதமரின் அனுமதியோடு சிங்கப்புர் பல்கலைக்கழகத்தின் நகரத்திட்டமிடல் சம்பந்தமானவளாகத்தின் உதவியோடு பெரிய திட்டமிடலொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் மேலதிக நிதியொதுக்கீட்டைசெய்வதற்கு முன்வந்திருக்கின்றது. அதனையும் மிகவிரைவாக செய்து திருகோணமலை நகரையும் அபிவிருத்திசெய்கின்ற திட்டத்தினையும் முன்னெடுத்துள்ளோம்.
சிங்கப்புர் நிருவனத்தின் உதவியோடு சிங்கப்புர் பல்கலைக்கழகத்தினால் இந்த செயற்பாட்டை செய்து தருவதற்குமிக விரைவாக விடயங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
சம்மாந்துறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கமைய சம்மாந்துறை பொது நுலகத்திற்கு அருகாமையுள்ள வயற்காணிகளை இதற்கென சுவீகரித்து சம்மாந்துறை நகரை விஸ்தரிப்பதற்கானமுயற்சிகளையும் திட்டமிடல்களையும் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றையெல்லாம் செய்து முடிக்க சிலவருடங்கள் சென்றாலும் அதனை முன்னெடுக்கவுள்ளோம்.
இதன்முதற்கட்டமாக சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியை மையப்படுத்திய காரைதீவு- அம்பாறை நெடுஞ்சாலையைஇருமடங்கிலும் விஸ்தரித்து நடுவில் மின்விளக்குகளை பொருத்தி அழகுபடுத்தவுள்ளோம். இதற்கென1300மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை ஏ தரத்திற்கு தரமுயற்துவதற்கான அங்கீகாரத்தினை சுகாதாரஅமைச்சு அளித்துள்ளது. அதற்கமைய இவ்வைத்தியசாலையை குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சுமார்2000 மில்லியன் ரூபாய் நிதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவள்ளோம்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ காதிர்,சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ. சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM