Web
Analytics
சம்மாந்துறை பிரதேசத்தை ஒரு செழிப்பான நகரமாக மாற்றியக்கவுள்ளோம் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress

(சம்மாந்துறை மேலதிக நிருபர்)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற காலங்களில் கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சம்மாந்துறை பிரதேசத்தை ஒரு செழிப்பான நகரமாக மாற்றியமைத்து எல்லோரும் பெருமைப்படக்கூடிய பிரதேசமாக மாற்றியமைக்கவுள்ளது. அதற்கான சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை மக்கள் பேதங்களை மறந்து அனைவரும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் தேர்தல் பிரசாரக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே –

கல்முனை-சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா வரவுஇ செலவுத்திட்டத்தில் எனது அமைச்சுக்கு மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம் மூலம் இதற்கான செயற்றிட்ட வரைபை தயாரித்துஇ அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் நாங்கள் பெற்றுவிட்டோம்.

சம்மாந்துறைக்கு நவீன பஸ்தரிப்பு நிலையயும்இ சந்தைக் கட்டிடத் தொகுதியும் அமைத்துக் கொடுப்போம். சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்குபின்னாலுள்ள மைதானத்தைஇ 400 மீற்றர் ஓட்டப்போட்டி வைக்கக்கூடிய உள்ளக விளையாட்டு மைதானமாக புனரமைப்பதற்கான சகலஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவிட்டோம்.

சம்மாந்துறையில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு நாங்கள் முயற்சித்த வருகிறோம். இவ்விடயம் தொடர்பில் பிரதமரும் என்னிடம்சில வாக்குறுதிகளை தந்திருக்கிறார். தற்போது ஆடைத் தொழிற்சாலையொன்றை நாங்கள் அமைத்துவருகிறோம். அதனை சிறந்ததொருதொழிற்பேட்டையாக மாற்றவதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்துவருகிறோம்.
பிரதான வீதியை இருமருங்கிலும் விஸ்தரித்துஇ நடுவில் தெருவிளக்குளை அமைப்பதற்கான பாரிய திட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் வைத்திருக்கிறார். அத்துடன் சம்மாந்துறை மக்களின் பொழுதுபோக்குக்காக வந்துசெல்லக்கூடிய வாவியுடன் கூடிய திடல் ஒன்றையும்அமைப்பதற்கும் அவர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இவற்றுடன் உடற்பயிற்சி நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.

இதுதவிரஇ சம்மாந்துறை அல்லைக் காணிகள் வெள்ளத்தில் மூழ்கிஇ சிறுபோகத்தில் மாத்திரம்தான் விவசாயம் செய்யலாம் என்ற ஒரு நிலைமைகாணப்படுகிறது. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக செய்துமுடிப்பதற்கான வரைபுகளை நாங்கள்செய்திருக்கிறோம்.

விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கைக்காக தங்குதடையின்றி நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொள்வதற்காக வீரகொட வாவி மற்றும் வளத்தாப்பிட்டி குளம்என்பவற்றை தோண்டி புனரமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதிலிருந்து நீரை கொண்டுவரும் எஸ் கால்வாயை திருத்தவேண்டும். இதில் இருமருங்கிலும் வரம்புகளை அமைத்து அந்த வீதியை செய்யவேண்டிய திட்டத்தையும் நாங்கள் உள்ளடக்கியிருக்கிறோம்.

அத்துடன் ஊரின் நடுவே செல்லும் எஸ்- 24 கால்வாயில் வளர்த்துள்ள செடிகளையும் அகற்றி சம்மாந்துறையை அழகுபடுத்தும் இந்தசெயற்திட்டங்களை இந்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இதனுடன் சேர்த்து பாடசாலை மாணவர்கள் செல்லக்கூடியவாறு பாதைகளையும்இ பாலங்களையும் அமைப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இவை எல்லாவற்றையும் செய்வதற்கான வேலைகளை நாங்கள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்குமுழுமையான உந்துதலை வழங்கும்முகமாகஇ எதிர்வருகின்ற தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை எங்களிடம்ஒப்படைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக்இ கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத்இ கட்சியின் பிரதிச்செயலாளர் மன்சூர் ஏ. காதிர்இமுன்னாள் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்இ முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன்இ கட்சியின்உயர்பீட உறுப்பினர்கள்இ கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM