(எம்.சி. அன்சார்)

‘முஸ்லிம் மக்களின்  ஆதரவைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸை எப்படியும் அழித்து விட வேண்டுமென்று இந்நாட்டு பேரினவாத சக்திகள் திட்டமிட்டு வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நிதானமாகவும், உறுதியாகவும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துக் கொண்டிருக்கின்றது. என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் தெிரிவத்தார்.

எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வெற்றிகொள்வது சம்பந்தமான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது. இதில் தலைமைதாங்கி  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நமக்கு ஆதரவான அரசாங்கம் இருந்தும் கூட முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உசார்படுத்துகின்ற இந்த வேளையிலே எல்லோரும் நினைக்கின்றார்கள் முஸ்லிம் காங்கிரஸை ஒழித்து விட்டால் நாங்கள் நினைப்பதனை சாதித்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றார்கள். அது மலைமீது வைத்த சிலையாகவிருக்கட்டும், அல்லது ஊனை நிர்வாக அலகுகளை பிரிக்கின்ற நிலைமையாகட்டும் இந்த எல்லா நிலைமைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் நிதானமாகவும், உறுதியாகவும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது.

தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் நிதானமாகவும், சாணக்கியமாகவும் நமது போராட்டத்தை மிகச்கச்சிதமாக வழிநடாத்தியக் கொண்டிருக்கின்றார்.நமது போராட்டமானது ஆயுதமேய்ந்துகின்ற போராட்டமல்ல, உணர்ச்சிவசப்படுகின்ற போராட்டமல்ல, புத்தியை மாத்திரம் பாவித்து செயற்படுகின்ற போராட்டமாகவே கருத வேண்டும்.

இன்று சர்வதேச ரீதியாகவும் சரி, இந்நாட்டு பேரினவாத சக்திகளாக இருந்தாலும் சரி, சிற்றிளவாத சக்திகளாக இருந்தாலும் சரி எல்லோருமே முஸ்லிம் காங்கிரஸை மாத்திரம் அழித்தொழிக்கும் திட்டங்களை வகுத்துத்துள்ளனர். முஸ்லிம்களை அமித்தொழிப்பதற்கு முஸ்லிம்களின் ஒற்றுமையை சின்னாபின்னமாக்குவதற்கு அதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் மூலம் முஸ்லிம் காங்கிரஸை அழித்துவிட்டால் இனிமேல் இந்நாட்டில் முஸ்லிம்கள் குரல் அற்ற குரல்களாக தங்களின் குரல்களை எழுப்ப முடியாது. அடக்குமுறை மீண்டும் நாட்டிலே தோன்றலாம். இதனை இளைஞர்கள் இவற்றினை மிக உன்னிப்பாக பார்க்க வேண்டும். வயதானவர்கள் பழங்கால சம்பவங்களை நிணைத்துப்பார்க்க வேண்டும். அவ்வாறானதொரு காலகட்டத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று எல்லோரும் சம்மாந்துறையை நோக்கி கண்வைத்துள்ளனர்.  கடந்த பொதுத்தேர்தலில் சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு குறைவான வாக்குகள் அழித்ததன் காரணமாக எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி ஆதிகாரத்தை கைப்பற்றலாம் என பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  

சாணக்கியமாகவும், சாமத்தியமாகவும் காய்நகர்த்தகின்ற ஒரு தலைமையை இறைவன் எமக்கு இரண்டாவது தலைமையாக தந்துள்ளான். அந்த தலைமையை இல்லாதொழிப்பதன் மூலம் அவரை அதிகாரமற்றவராக ஆக்குவதன் மூலம் இந்த நாட்டிலே முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். நாங்கள் அனைவரும் குரோதங்களை மறந்து ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு அதிகப்படியான வாக்குகளினால் சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து வட்டாரங்களையும் வெற்றிகொள்ள வேண்டும். என்றார்.

இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் வேட்பாளர்கள், உலமாக்கள், கட்சியின் முக்கியஸ்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM