திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையை பிரித்து நகர சபையாகயாகவும், பிரதேச சபையாகவும் மற்றும் சாய்ந்தமருதுக்கான புதிய உள்ளுராட்சி மன்றத்தினை அமைப்பது சம்பந்தமாக அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினரோடு ஆராய்வதற்கான விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்க தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், மாவட்ட நில அளவைத்திணைக்கள சிரேஷ்ட அத்தியேட்சகர் எம்.ரி.எம். றபீக், பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எம்.றாபி, பிரதேச செயலாளர்களான எஸ்.எம்.முகம்மட் ஹனீபா, எஸ்.லவநாதன், எம்.எம்.ஹனீபா, எம்எஸ்.கனி,சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எம்.சலீம், புள்ளிவிபரத்திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்த கொண்டனர்கள்.
இங்கு விசேடமாக சம்மாந்துறை பிரதேச சபையை பிரிந்து நகர சபையாகவும், பிரதேச சபையாகவும் அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச சபையாது, 133 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 51 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும், சுமார் 90 ஆயிரம் மக்கள் தொகையையும், 47 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்ட பிரதேசமாகும். 1947 ஆம் ஆண்டு சம்மாந்துறைப் பட்டின சபையாகவும், 1960 ஆம் ஆண்டு கிராம சபையாகவும், 1988 ஆம் ஆண்டு முதல் பிரதேச சபையாக இயங்கி வருகின்றது. 

சம்மாந்துறை மக்களின் நீண்டகாலக் கேரிக்கையாகயான, சம்மாந்துறை பிரதேச சபையை பிரிந்து நகர சபையாகவும், பிரதேச சபையாகவும் அமைப்பது சம்பந்தமான உத்தேச அறிக்கை அடங்கிய மகஜர் (திட்ட) ஒன்றை முன்னாள் பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய மற்றும் தற்போதைய உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர்களிடம் ஏற்கனவே சமர்ப்பித்துத்து ஆரம்பக் கட்ட நடவடிக்கையினை எடுத்துள்ளேன். இதற்கான நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ரீதியான குழுவினர் விரைவில் முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கெட்டுக்கொண்டார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் வட்டார எல்லைகள் நிர்மாணத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகவிருந்தவரினால் பிழையாக முறையிலும், எவரின் ஆலோசனைகளைப் பெறாமலும், தான்தோன்றித்தனமாகவும் வட்டார எல்லைகள் பிரிக்கப்பட்டதினால் புதிய சுற்றுநிருபத்திற்கு அமைவாக சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாகவும், பிரதேச சபையாகவும் அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.

சம்மாந்துறை பிரதேச சபை 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 2012ஆண்டு வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு வட்டாரங்கள் மாத்திரம் நகரத்தினை உள்ளடக்கியதாகவும், ஆறுவட்டாரங்கள் நகரத்தினையும், கிராமங்களையும், இரண்டு வட்டாரங்கள் கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகின்றமையினால் வட்டாரங்களை உடைக்காமல் இரண்டு சபைகளாக அமைக்க முடியாத நிலைமையுள்ளது. வட்டார எல்லைகள் நிர்மாணத்திற்கு எதிராக மேன்முறையீட்டினை நான் எற்கனவே செய்துள்ளேன்.

சபையின் தற்போதைய வட்டார எல்லைகள் நிர்மாணத்தினை மேன்முறையீட்டு மூலம் சரி செய்யும் வேளை அது முடியாவிட்டால் முழு சம்மாந்துறை பிரதேசத்தையும் நகர சபையாக தரமுயத்துவதற்காக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு சிபாரிசு செய்யுமாறு இக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் வலியுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More