சம்மாந்துறை மக்களின் நீண்டகாலத் தேவையாகவுள்ள  நவீன பஸ் தரிப்பிடம் அமைத்தல், புதிய பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி அமைத்தல் மற்றும் நகர மண்டபம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்காக சம்மாந்துறைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பிரதான காரியாலயம் அமைந்துள்ள காணி மற்றும் நகர மண்டபம் உட்பட அமைந்துள்ள காணி நான்கு ஏக்கர் உள்ளது.

மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சம்மாந்துறைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தீர்வென்றுக்கு வரவுள்ளதுடன், நிர்வாகம் ஒத்துழைக்காத சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் கீழ் காணியினைப் பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக மண்டபத்தில்  இன்று வியாழக்கிழமை(16) நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – சம்மாந்துறை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத பாரிய சவால்கள் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு என்னுடைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அபிவிருத்தியில் நீண்டகாலமாக பின்தங்கியுள்ள சம்மாந்துறையை அபிவிருத்தி செய்ய எவ்வாறான சவால்கள், தடைகள் ஏற்பட்டாலும்  அதனை எதிர்கொண்டு முறியடிக்க தயாராகவுள்ளேன். அதற்கு அனைவரும் எனக்கு ஆதரவு தரவேண்டும்.

2017ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம் சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், பிரதேச மட்டத்தில் வீதிப்போக்குவரத்துக் குழுவாக இயங்கி வீதி விபத்துக்கள் தொடர்பாக மீளாய்வு செய்து சாரதிகளையும், பொதுமக்களையும் அறிவுட்டல், திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விலங்கு கொல்களம் என்பனவற்றினால் தெனை அன்மித்த நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஊனைய ரெச நிறுவனங்களின் சுற்றாடல் மாசுபடுவதனால் அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தல் உட்பட முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

இதில் கிழக்கு மாகாண சபை எதிர்க்ட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், ரி. கலையரசன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.கே. முஸ்தபா, திணைக்களங்களின் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், உட்பட பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More