Web
Analytics
சம்மாந்துறை மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக தெரிவு; கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress

சம்மாந்துறை மத்திய முஸ்லிம் கல்லூரி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கிரிக்கெட் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்குமான மென்பந்து விளையாட்டு உபகரணங்கங்களும் இன்று (16)வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் ஏ.சி.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம் மன்சூர் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜிம்,மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ சபூர் தம்பி,சம்மாந்துறை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.சபூர்தீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்க்ள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM