Web
Analytics
சம்மாந்துறை 6ம் வட்டார வேட்பாளர் ஸபீக் இஸ்மாயில் ஏற்பாடு செய்த பெண்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் - Sri Lanka Muslim Congress

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் 6ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஸபீக் இஸ்மாயில் அவர்கள் ஏற்பாடு செய்த பெண்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (11) நடைபெற்றது.

இதில் 6ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஸபீக் அவர்களின் தந்தை சபீனா கோல்ட் ஹவுஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உருவாகத்திற்கு மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் செயப்பட்ட மூத்தபோராளி ஏ.சீ.ஏ.எம்.புஹாரி மௌலவி, கட்சியின் போராளி எச்.எல்.எம்.நாஸர், ஆசிரியர் அஜ்வத், முக்கியஸ்தர்கள், பெண்கள் மகளிர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிப்பதன் முக்கியத்தை பென்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM