Web
Analytics
சர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸின் சர்வதேச மாநாடு நிறைவு - Sri Lanka Muslim Congress

முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தொனிப்பொருளில் அமைந்த இரு நாள் சர்வதேச மாநாடு ஐக்கிய அரபு நாடான அபூதாபியில் இன்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.

இம்மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பௌஸிஇ கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தலைமையிலான அணியினர் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தனர். ‘சர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸ்’ என்ற அமைப்பாலேயே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்குபற்றிய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து அறிக்கையொன்றைச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் உலகின் நாலா பாகங்களிலுமிருந்தும் சமூக செயற்பாட்டாளர்கள்இ சமூகத் தலைவர்கள்இ ஆன்மீக அழைப்பாளர்கள் முஸ்லிம் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் பெரும்பான்மை சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட சுமார் 400 செயற்பாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சமூகப் பாதுகாப்பையும் நீடித்த சமாதானத்தையும் கலாசார விழுமியங்களையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உலகில் வாழும் ஏனைய சமூகத்தாரோடு சகிப்புத் தன்மை மற்றும் பரஸ்பர கலந்துரையாடல்களின் பெறுமானத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த சர்வதேச மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அங்கு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM