கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 குடும்பங்கள் நாவிதன்வெளி பிரதேசத்தின் கீழுள்ள சவளக்கடை 5ஆம் கொளனி பிரதேசத்தில் ஜம்மியத்துல் இஸ்லாமிய நிறுவனத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் நீண்டகாலமாக குடிநீர் இன்மையால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டுவந்தனர்.

இதன் பயனாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்ச்சியினால் குடிநீர் வழங்க இவ்வீட்டுத்திட்ட பிரதேசத்திற்கான நீர்குழாய் பதிக்கும் வேலைத்திட்டம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நசீலின் மேற்பார்வையின் கீழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜெ.நஸ்ரூல் கரீம் தலைமையில் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் வேலைத்திட்டம் சிரமதான அடிப்படையில் மத்தியமுகாம் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஏ.நாஸர் மற்றும் மத்தியமுகாம் தேசிய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையும், சன்பவர் நிறுவனமும் இணைந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் கனரக வாகனங்களின் உதவிகளுடன் நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுக்களின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்களின் உதவிகளுடன் குழாய் பதிக்கும் வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM